இந்தியாவின் சுதந்திர தினம் இனி கருப்பு தினம் – பாகிஸ்தான் உத்தரவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சட்டப்பிரிவு 370ன் கீழ் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இனி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். இதற்கான மசோதா நேற்று முதல் அமலுக்கும் வந்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரும் பீதியிலேயே உள்ளனர். இந்தியாவின் மீது கடும் கோபத்தில் உள்ள பாகிஸ்தான், இந்தியா மீது புல்வாமா போன்ற பல தாக்குதல்கள் நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர்
 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சட்டப்பிரிவு 370ன் கீழ் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இனி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். 


இதற்கான மசோதா நேற்று முதல் அமலுக்கும் வந்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரும் பீதியிலேயே உள்ளனர்.

இந்தியாவின் சுதந்திர தினம் இனி கருப்பு தினம் – பாகிஸ்தான் உத்தரவு


இந்தியாவின் மீது கடும் கோபத்தில் உள்ள பாகிஸ்தான், இந்தியா மீது புல்வாமா போன்ற பல தாக்குதல்கள் நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறியுள்ளார். இதனால் பாதுகாப்புப் படை கூடுதலாக போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கான இந்திய உயர் கமிஷனரை வெளியேற்றுவோம் என திட்டவட்ட அறிவிப்பை அறிவித்ததுடன் அதனை செயலாற்றவும் செய்துள்ளது.

பாகிஸ்தான் சுதந்திர தினம் காஷ்மீர் மக்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் வகையில் கொண்டாடப்படும். இந்தியாவின் சுதந்திர தினம் கருப்பு தினமாக கொண்டாடப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

From around the web