இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று!

 
corona

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு முதல் முதலாக கொரோனா ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர் குணமானார் என்பதும் தெரிந்ததே/ இந்த நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் கொரோனா பதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியபோது இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பரவிய மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு வகை பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை. அவர் மேல்படிப்புக்காக டெல்லி செல்ல தயாராகி போது அவருடைய மாதிரிகள் சோதனை செய்யப்பட்டபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு தற்போது மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

From around the web