பாக்யராஜின் முருங்கைக்கு இவ்வளவு டிமாண்டா? ஐடி வேலை இனி வேண்டாம்.. முருங்கை இலை பிசினஸ் செய்யுங்கள்.. ரூ.1000 கோடி டர்ன் ஓவர்..

  பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ என்ற படத்தின் மூலம் தான் முருங்கை இலை, முருங்கைக்காய் பிரபலமானது என்பதும் முருங்கை இலையும் முருங்கக்காயும் சாப்பிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அவர் காமெடியாக…

murugai

 

பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ என்ற படத்தின் மூலம் தான் முருங்கை இலை, முருங்கைக்காய் பிரபலமானது என்பதும் முருங்கை இலையும் முருங்கக்காயும் சாப்பிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அவர் காமெடியாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது சீரியஸாகவே முருங்கைகாய், முருங்கை இலை குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் முருங்கை இலைக்கு மிகப்பெரிய பிசினஸ் தற்போது கிடைத்து வருகிறது. லட்ச கணக்கில் சம்பளம் ஆகும் ஐடி வேலையை கூட விட்டு விட்டு முருங்கை இலையை பொடி செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலை தற்போது செய்து வரும் ஸ்டார்ட் தொழில் அதிபர்கள் கோடி கணக்கில் சம்பாதித்து வருவதாகவும் இந்தியாவிலிருந்து மட்டும் முருங்கை இலை பிசினஸ் சுமார் ரூ.1000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முருங்கை ஏற்றுமதியில் இந்தியா ஒரு சர்வதேச மையமாக வளர்ந்து வருவது சாதாரணமான செயல் அல்ல. ஒரு காலத்தில் சாதாரணமாகவும், அதிகம் பயன்படுத்தப்படாத மரமாக இருந்த முருங்கை , இப்போது “சூப்பர்ஃபுட்” என்று போற்றப்பட்டு, ரூ.1,000 கோடி ஏற்றுமதி வாய்ப்பாக பெருகியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வலுவான தேவை இருப்பதால், முருங்கை சாகுபடி இனி ஒரு பாரம்பரிய பயிர் மட்டுமல்ல; இது ஒரு வேகமாக வளர்ந்து வரும் வேளாண் வணிகமாக மாறியுள்ளது.

இந்தியாவின் முன்னணி முருங்கை உற்பத்தி செய்யும் மாநிலமான தமிழகத்தில், பிரத்யேக முருங்கை ஏற்றுமதி வசதி மையம் தொடங்கப்பட்டதன் மூலம், இந்த துறைக்கு ஒரு பெரிய ஊக்கம் கிடைத்துள்ளது. முருங்கையின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், முருங்கை ஏற்றுமதியில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகத் தரவுகளின்படி, உலகளாவிய முருங்கை தேவையில் கிட்டத்தட்ட 80% ஐ இந்தியா பூர்த்தி செய்கிறது. மேலும், 108 முதல் 169 நாடுகளுக்கு முருங்கையை ஏற்றுமதி செய்கிறது.

“தற்போது தமிழகத்தில் 35 ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதால், புதிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இந்திய முருங்கை ஏற்றுமதியில் 60% க்கும் மேல் பங்களிக்கின்றன. தமிழகத்தில் இப்போது அரசு ஆதரவு பெற்ற முருங்கை ஏற்றுமதி வசதி மையம் உள்ளது. இது தரத்தை தரப்படுத்துதல், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல் மற்றும் உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஒரு கிலோ முருங்கை இலை பொடிக்கு ரூ.800 முதல் ரூ.2,500 வரை சம்பாதிப்பதாக தெரிவிக்கின்றனர். இது பல பாரம்பரிய பயிர்களை விட மிக அதிகம்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்கள் கூட தங்கள் கார்ப்பரேட் வேலைகளை விட்டுவிட்டு முருங்கை பிராண்டுகளை தொடங்கி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் வெற்றி கதைகள் பெருகி வருகின்றன. முருங்கையின் உண்மையான பொற்காலம் ஆரம்பித்துவிட்டது.

முருங்கை தூள், முருங்கை தேநீர் தூள், நியூட்ராசூட்டிகல் மாத்திரைகள், கோல்ட்-பிரஸ் முருங்கை எண்ணெய் ஆகிய பொருட்கள் உலகளவில் நல்ல விலையை பெறுகின்றன.