குவைத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்களா இந்தியர்கள்? பரபரப்பு தகவல்

அமெரிக்காவை அடுத்து குவைத்திலிருந்தும் இந்தியர்கள் வெளியேற்றப்படுகிறார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குவைத் நாட்டின் மக்கள்தொகை 48 லட்சம் என்ற நிலையில் அங்கு 20 லட்சம் பேர் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இந்தியர்களை அடுத்து அதிகமாக எகிப்து நாட்டினர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வெளிநாட்டினர் குடியுரிமை ஒதுக்கீட்டு வரைவு மசோதா ஒன்றுக்கு குவைத் நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் குவைத்தில் இருந்து சுமார்
 

குவைத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்களா இந்தியர்கள்? பரபரப்பு தகவல்

அமெரிக்காவை அடுத்து குவைத்திலிருந்தும் இந்தியர்கள் வெளியேற்றப்படுகிறார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குவைத் நாட்டின் மக்கள்தொகை 48 லட்சம் என்ற நிலையில் அங்கு 20 லட்சம் பேர் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இந்தியர்களை அடுத்து அதிகமாக எகிப்து நாட்டினர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெளிநாட்டினர் குடியுரிமை ஒதுக்கீட்டு வரைவு மசோதா ஒன்றுக்கு குவைத் நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குவைத் மக்கள் தொகையில் இந்தியர்கள் 15 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இந்த சட்டம் கூறுகிறது என்பதால் அங்குள்ள இந்தியர்கள் வெளியேறும் ஆபத்து உள்ளது. குவைத் நாட்டில் சொந்த நாட்டினரின் மக்கள் தொகையைவிட வெளிநாட்டிலிருந்து வந்து தங்கும் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

குவைத் நாட்டின் பிரதமர் சட்டத்திற்கு அனுமதி அளித்து இருப்பதாகவும் குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் உள்நாட்டு மக்கள் 70 சதவீதமும் வெளிநாட்டினர் 30% மட்டுமே இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அனைத்து அதிகாரிகளும் உறுதி செய்திருப்பதாகவும் தெரிகிறது

வேளை குவைத்தில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டால் கேரள மாநிலம் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web