ரிஹானாவின் மதத்தை கூகுளில் குறித்து தேடும் இந்தியர்கள்!

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஹாலிவுட் நடிகையும் பாப் பாடகியுமான ரிஹானா இன்று காலை தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்திருந்தனர்
இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ட்விட்டை அடுத்து ரிஹானா யார்? என பல இந்தியர்கள் கூகிளில் தேட ஆரம்பித்துள்ளனர். ரிஹானா எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? ரிஹானா முஸ்லிமா? என்பது குறித்த தகவல்களை இந்தியர்கள் கூகிளில் தேடி வருவதாக கூகுள் டேட்டா தெரிவித்துள்ளது
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் பதிவு செய்ததை அடுத்து அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று இந்தியர்கள் தேடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரிஹானாவின் டுவிட்டிற்கு நடிகை கங்கனா ரனாவத் உள்பட பலர் பதிலடி கொடுத்தாலும், இந்திய விவசாயிகளின் போரட்டம் இன்று உலக அளவில் பேசப்படுவதற்கு ரிஹானாவின் ஒரே ஒரு டூவிட் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ரிஹானாவின் டுவிட்டிற்கு பின்னரே பல ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் சர்வதேச அரசியல் தலைவர்களும் இந்த போராட்டம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்