மனதில் வலியை ஏற்படுத்துகிறது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம்!

நாசிக் ஆக்சிஜன் கசிவால் உயிரிழந்த 22 பேர்கள் சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி கூறுகிறார்!
 
மனதில் வலியை ஏற்படுத்துகிறது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம்!

மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்ற வைரஸ் கிருமி  கொரோனாவாகும். மனிதனின் கண்ணுக்கு தெரியாமல் மனிதனின் உடலுக்குள் புகுந்து மனிதனை நோய் தள்ளுகிறது. மேலும் கொரோனா நோயானது பலரை உயிரிழக்கவும் செய்துள்ளது. இதற்கு எதிராக இந்திய அரசானது மிகவும் தீவிரமாக போராடுகிறது. மேலும் இந்தியாவில் இதுவரை இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் மத்திய அரசின் சார்பில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

oxegen

மேலும் ஒரு சில பகுதிகளில் இந்த கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது சோகத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.இந்நிலையில் இந்த ஆட் கொடிய நோயான கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்ஸிஜனும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது  ஆக்ஸிஜனும் பற்றாக்குறை உள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்நிலையில் இன்று காலை மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிசன் கசிவால் 22 நோயாளிகள் இறந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய செய்தது.

தற்போது இதுகுறித்து நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக கூறியுள்ளார். அதன்படி அவர் நாசிக் மருத்துவமனையில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும்  உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

From around the web