எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கூறும் பாரத பிரதமர் நரேந்திர மோடி!

மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று கூறும் கூறுகிறார் பிரதமர் மோடி!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.  தமிழகத்தில் பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

bjp

மேலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியில் ஒதுக்கப்பட்டது. மேலும் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் பாஜகவின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரபல நடிகை குஷ்பு போட்டியிடவுள்ளார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் உலகநாயகன் கமலஹாசன் எதிர்த்து வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளார்.

 சில தினங்கள் முன்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம்  வந்து பரப்புரை மேற்கொண்டார் . தற்போது அவர் கூறியுள்ளார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மிக விரையில் சரியான நடைமுறையில் கட்டப்படும் எனவும் கூறினார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர வேண்டும் என்று நினைத்தது பாஜகதான், காங்கிரஸ் திமுக கூட்டணி அல்ல எனவும் மோடி கூறியுள்ளார். திமுக காங்கிரசார் தமிழகத்தின் பாதுகாவலர்கள் என சித்தரித்து கொள்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல எனவும் மோடி கூறியுள்ளார்.

From around the web