பாரத பிரதமரின் அவசர ஆலோசனை "காணொலியில்"உயர்மட்டக்குழு விளக்கம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உயர்மட்டக்குழு உடன் அவசர ஆலோசனை!
 
பாரத பிரதமரின் அவசர ஆலோசனை "காணொலியில்"உயர்மட்டக்குழு விளக்கம்!

மக்கள் மத்தியில் நோய் பரப்பும் கிருமியாக காணப்படுகிறது கொரோனா வைரஸ். கொரோனா  மனிதனுக்கு இன்னல்களை கொடுக்கிறது. இந்த கொரோனா இந்தியாவில் கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது. ஆனால் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் மீண்டும் எழுந்து மக்களுக்கு மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சென்னை மும்பை டெல்லி போன்ற பகுதிகளில் இந்நோயின் தாக்கம் ஆனது மிகவும் வீரியம் உள்ளதாக காணப்படுவது மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளனர்.

oxygen

மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் முழு ஊரடங்கும் பிறப்பித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில பகுதிகளில் ஆக்சிசன் பற்றாக்குறையும் தடுப்பூசிகள் பற்றாக்குறையும் நிலவுவது கண்முன்னே தெரிகிறது. ஆக்சிசன் பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அதிக சோகத்தை உருவாக்கியது. இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஆலோசனை கூடியுள்ளார்.

மேலும் ஆக்சிஜன் வினியோகம் தொடர்பாக உயர்மட்டக் குழு உடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது மேலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான  எடுத்த முயற்சிகள் குறித்து பிரதமர் மோடியுடன் உயர்மட்டக்குழு விளக்கம் அளித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web