மார்ச் 30ல் தமிழகத்திற்கு பாரத பிரதமர் வருகிறார்!

அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல் பிரதமர் மோடி தமிழகம் வருகை!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகள்  பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி யில்கலந்து கொண்டனர்.மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி  தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சியையும் பாமக கட்சியின் வைத்துள்ளது.

bjp

அதிமுக தரப்பிலிருந்து பாஜக 20தொகுதிகள்  வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு களமிறங்க உள்ளார்.  இந்நிலையில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அவர் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web