டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாம் தடுப்பூசி போட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வின் இரண்டாம் தடுப்பூசி போட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி!
 

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றாலும் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது கொரோனா நோய் தான். இந்த கொரோனா முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்பு அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவியது. குறிப்பாக இந்த கொரோனா ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக இத்தாலி,பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த கொரோனா நோயானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் பரவ தொடங்கியது.

covid 19

 இந்திய அரசு கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே திட்டத்தை அமல்படுத்தியது.இந்நிலையில் சில தினங்களாக கொரோனா தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி இதர மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் அவர் முன்னதாக மார்ச் 1ஆம் தேதி கொரோனாவின் தடுப்பூசி போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க.து மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார். தகுதி உள்ளவர்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் நோய் தடுப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு தடுப்பூசி ஒரு வழியாக உள்ளது உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அவருக்கு தடுப்பூசி போட்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் நிவேதா இரண்டாவது முறையும் தடுப்பூசி போட வாய்ப்பைப் பெற்றதாக  மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

From around the web