தமிழர்களுக்கு தமிழில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து  கூறிய பாரத பிரதமர்!

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கள் கூறிய பாரத பிரதமர் நரேந்திர மோடி!
 
தமிழர்களுக்கு தமிழில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய பாரத பிரதமர்!

இந்தியாவில் விடுமுறை தினமாக குடியரசு தினம் சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மூன்று மட்டுமே பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களின் தேவைக்கேற்பவும் விடுமுறைகள் தற்போது கொண்டாடுகின்றன. மேலும் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது .தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1ம் தேதியான இன்று தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் இதற்காக தமிழகத்தில் மக்கள் காலையில் எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து புத்தாண்டு கொண்டாடுகின்றனர். மேலும் பலர் கோவில்களுக்கு சென்று புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

new year

மேலும் தமிழ் புத்தாண்டான இன்றைய தினம் தமிழக மக்களுக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்கள் கூறிவந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்களும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிவந்தனர். அதன்படி இந்திய நாட்டின் பாரத பிரதமராக உள்ள நரேந்திர மோடி தற்போது தமிழக மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினார். மேலும் குறிப்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் வாக்கியங்கள் எழுதிய போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதனை காணும் தமிழர்கள் அந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் அதில் தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அதில் தமிழ்ப்பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிலைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன் என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது போன்று பல தலைவர்களும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்

From around the web