அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: இந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் செய்தியால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஈரான் தளபதி சுலைமான் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி உள்பட ஒருசில பொருட்கள் விலை ஏறினாலும் பங்குச் சந்தை நேற்று படுமோசமாக வீழ்ச்சி
 
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: இந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் செய்தியால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ஈரான் தளபதி சுலைமான் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி உள்பட ஒருசில பொருட்கள் விலை ஏறினாலும் பங்குச் சந்தை நேற்று படுமோசமாக வீழ்ச்சி கண்டது.

இப்போதைக்கு இல்லாத அளவில் சென்சஸ் 178 புள்ளிகள் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிஃப்டி 233 புள்ளிகள் சரிவை சந்தித்தது. இந்த சரிவின் காரணமாக நேற்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதட்டம் மேலும் அதிகரித்தால் இந்திய பங்குச் சந்தை உள்பட உலக பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web