உலக கொரோனா பாதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மூன்று நாடுகளில் மட்டுமே: அதிர்ச்சி தகவல்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2.5 கோடி மக்களில் 53 சதவீதம் பேர் இந்தியா அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் பிற அனைத்து நாடுகளிலும் சேர்த்து வெறும் 47 சதவீதம் தான் என்பதும் குறிப்பிடப்பட்டது இது குறித்த புள்ளி விவரம் வெளியாகி அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 55 லட்சம்
 

உலக கொரோனா பாதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மூன்று நாடுகளில் மட்டுமே: அதிர்ச்சி தகவல்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2.5 கோடி மக்களில் 53 சதவீதம் பேர் இந்தியா அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் பிற அனைத்து நாடுகளிலும் சேர்த்து வெறும் 47 சதவீதம் தான் என்பதும் குறிப்பிடப்பட்டது

இது குறித்த புள்ளி விவரம் வெளியாகி அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 55 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பிரேசில் நாட்டில் 38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்தியாவில் 35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவில் கொரோனாவால் 8.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்பட்டாலும் இந்தியா பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே அதிகபட்சமாக இருப்பதால் மற்ற நாடுகளில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web