ஆக்சிசன் தட்டுப்பாட்டில் திணறும் இந்தியா-உதவி கரம் கொடுக்கும் உலக நாடுகள்!

ஆக்சிசன் தட்டுப்பாட்டில் காக நெருக்கடியான நிலையில் இந்தியாவுக்கு உதவும்  15நாடுகள்!
 
ஆக்சிசன் தட்டுப்பாட்டில் திணறும் இந்தியா-உதவி கரம் கொடுக்கும் உலக நாடுகள்!

தற்போது இந்தியாவில்  இரண்டாவது அலை கொரோனா எழுந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனால்  ஆக்சிசன் தேவை உள்ளது. ஆனால் சில தினங்களாக இந்தியாவில் ஆக்சிசன் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஆக்சிசன் உற்பத்தியானது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் அதனால் அதிக உயிரிழப்புகள் மிகவும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.oxygen

 பல்வேறு நாடுகளில் இருந்து ஒரு சில நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது உதவி செய்யும் விதமாக 15 நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அவற்றில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜெர்மனி ரஷ்யா சீனா பிரிட்டன் உள்ளிட்டவையும் குறிப்பிடதக்கது. மேலும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 318 ஆக்சிசன் செறிவூட்டிகள் டெல்லிக்கு வந்தன. மேலும் சவுதி அரேபியாவில் இருந்து ஆக்சிசன் கொண்டுசெல்ல12 கிரையோஜெனிக் கொள்கலன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் செயற்கை சுவாச கருவிகள் மருந்துகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் ஹாங்காங்கில் இருந்து 800 ஆக்சிசன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது நமது நட்பு நாடான சீனா. இதுபோன்று ஆக்சிஜன்  தட்டுப்பாட்டில் சிக்கித் திணறும் இந்தியாவுக்கு பல நாடுகள் உதவி செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது.

From around the web