அமெரிக்காவிடம் உதவி கோரும் இந்தியா; அதுவும் " 5 கோடி பைசர் தடுப்பூசி"!

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து 5 கோடி டோஸ் மருந்து வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது!
 
அமெரிக்காவிடம் உதவி கோரும் இந்தியா; அதுவும் " 5 கோடி பைசர் தடுப்பூசி"!

தற்போது நம் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயினும் பல பகுதிகளில் இந்த தடுப்பூசியின் தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா மட்டுமின்றி உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.covid

இன்னிலையில் இந்தியாவிற்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி கிறது. மேலும் வேர்ல்டு ஆர்கனைசேஷன் என்றழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனமும் இந்தியாவின் நிலைமை கண்டு கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்கு பல்வேறு உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவானது வல்லரசு நாடுகள் பட்டியலில் முக்கிய நாடாக கருதப்படும் அமெரிக்காவிடம் உதவி கோருவதாக கூறப்படுகிறது.

அதன்படி அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து 5 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாத காலத்தில் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மருந்தால் எதிர் விளைவுகள் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பைசர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சிக்கலுக்கு தீர்வு கண்டதும் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நம் உயர் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் இந்தியா அமெரிக்காவின் பைசர் நிறுவனம் உதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web