உலகில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா மக்கள் சோகம்!அமெரிக்கா மற்றும் பிரேசில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளது!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் தற்போது முதலில் நினைவில் வருவது கொரோனாநோய் தான். இந்த கொரோனா நோயானது முதன்முதலில் சீனா நாட்டில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகில் உள்ள பல நாடுகளுக்கும் நாட்டிலிருந்து கொரோனா பரவியதாகவும்,கொரோனா நோயானது கடந்தாண்டு தொடக்கத்திலேயே இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் இந்திய அரசானது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் கட்டுப்பாடுகளுடன் சில தினங்களாக கொரோனா பாதிப்பானது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியது. தமிழ்நாட்டிலும் கொரோனா மிகவும் உச்சத்தை எட்டியது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ள சென்னையிலும் கொரோனா மிகவும் அதிகரித்தது.
தமிழக அரசுமாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா உலக அளவில் முதல் இடத்தை எட்டியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் .அது என்னவெனில் இந்தியாவானது உலக அளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மூன்று நாளாக முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரேசில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 1.03 லட்சம்கொரோனா பாதிப்பு , அமெரிக்காவில் 36 ஆயிரம், பிரேசில் 31 ஆயிரம் கொரோனா பாதிப்பு பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது .இதனால் இந்திய மக்கள் மிகவும் சோகத்தில் கவலையில் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.