கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடுகள்: 10 வது இடத்தில் இந்தியா!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 வது வாரம் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஒரு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது, கோவிட் குடும்பத்தின் முந்தைய வைரஸ் பண்புகளைக் கொண்டிருந்த இந்த வைரஸுக்கு கொரோனா அல்லது கோவிட் 19 எனப் பெயரிட்டனர். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரண வைரஸாகக் கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளாலும் இதுவரை மருந்து
 
கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடுகள்: 10 வது இடத்தில் இந்தியா!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 வது வாரம் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஒரு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது, கோவிட் குடும்பத்தின் முந்தைய வைரஸ் பண்புகளைக் கொண்டிருந்த இந்த வைரஸுக்கு கொரோனா அல்லது கோவிட் 19 எனப் பெயரிட்டனர்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரண வைரஸாகக் கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளாலும் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடுகள்: 10 வது இடத்தில் இந்தியா!!

தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், மாற்று மருந்துகளான நோய் எதிர்ப்பு சக்தியினைத் தூண்டும் மருந்துகளைக் கொண்டும், ஆரோக்கியமான உணவுகளின்மூலமும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவினைத் தாண்டி இத்தாலியில் படு வேகமாகப் பரவிய வைரஸ், உலகம் முழுவதிலும் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது.

அந்தவகையில் உலக சுகாதார மையம் கொரோனாத் தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தினைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பிற்குள்ளான டாப் 10 நாடுகளின் பட்டியல்:

அமெரிக்கா, பிரேசில், ரஷியா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, இந்தியா.

From around the web