அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி!

 
moderana

இந்தியாவில் ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது 

அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான MRNA 1273 என்று கூறப்ப்டும் மாடர்னா தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வந்த நிலையில் இந்த தடுப்பூசியை இறக்குமதி சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்தியாவில் மொத்தம் நான்கு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நான்காவது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது அவசரகால பயன்பாடு என்ற அடிப்படையில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web