குமரியை தொடர்ந்து தூத்துக்குடியிலும் அதிகரிப்பு! மக்கள் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் பூ சந்தைகளின் பூக்களை விலையானது தற்போது இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்!
 
குமரியை தொடர்ந்து தூத்துக்குடியிலும் அதிகரிப்பு! மக்கள் அதிர்ச்சி!

நாம் அனைவரும் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் சோப்புகள் வாசனைப் பொருள்கள் பவுடர்கள் போன்றவை அனைத்தும் மலர்களில் வருகிறது. இவை அனைத்தும் மலர்களில் இருந்து தான் வருகிறது என்பது ஒரு சிலருக்கு தெரியாது வேதனையளிக்கிறது .ஒவ்வொரு மலர்களின் தேவையான வாசனை மற்றும் பொருள் உற்பத்தி மட்டுமின்றி ஒவ்வொருவரின் நிகழ்ச்சிகளிலும் தேவை இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது .அதன்படி எந்த கல்யாணம் எடுத்துக் கொண்டாலும் அங்கு முக்கியமான இடத்தை இந்த பூக்கள் பிடித்துள்ளன. இப்படி பல்வேறு சடங்குகளிலும் மலர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது மறுக்க முடியாத உண்மைதான்.

flowers

தமிழகத்தில் நாளைய தினம் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. மேலும் இன்றைய தினம் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் யுகாதி திருநாளை கொண்டாடுகின்றனர். நாளைய தினம் கொண்டாட இருக்கும் சித்திரை திருவிழாவிற்கு பூக்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலையானது பல மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் காலையில் கன்னியாகுமரியில் சந்தையில் பூக்களின் விலையானது இருமடங்கு உயர்ந்ததாக தகவல் வெளியானது.

கன்னியாகுமரியை தொடர்ந்து தற்போது முத்து நகரமான தூத்துக்குடியிலும் பூக்களின் விலையானது இருமடங்கு உயர்ந்ததாக தவறியது. அதன்படி தூத்துக்குடி பூ சந்தையில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பூக்களை விலையானது இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 250 க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ வானது இன்று கிலோ ஒன்றுக்கு 500 க்கு விற்பனை செய்து மக்களை அதிர்ச்சியை அளித்துள்ளது.மேலும் இது போன்று பல நறுமண பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

From around the web