இன்றுடன் முடிவடையும் வருமானவரி தாக்கலுக்கான அவகாசம்: அதிரடி அறிவிப்பு

 

2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கு இன்று அதாவது செப்டம்பர் 30 கடைசி நாள் என்ற நிலையில் இன்றைக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்துவிடுமாறு வருமானவரி தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது 

இன்றுக்குள் தாக்கல் செய்யாவிட்டால் தாமதமான வருமான வரித் தாக்கலுக்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் என்றும், கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்ய முடியாவிட்டால் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதமாக செலுத்தலாம் என்றும், இதற்கு கூடுதலாக ரூ.5,000 அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கலை வரும் நவம்பர் மாதம் 30 வரை நீட்டிப்பு என வருமான வரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் வருமானவரி தாக்கல் செய்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படாது என தெரிகிறது

From around the web