பொள்ளாச்சியில் பல பகுதிகளில் திடீர் சோதனை செய்த வருமான வரித்துறையினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் பல வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பல வணிக நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கோவையில் செயல்பட்டு வரும் சின்ன அண்ணன் நகைக்கடை, கணபதி நகைக்கடை உள்ளிட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் ஒரு பகுதியாக கடை ஊழியர்களிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் பல வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


கோவை மாவட்டத்தில் பல வணிக நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கோவையில் செயல்பட்டு வரும் சின்ன அண்ணன் நகைக்கடை, கணபதி நகைக்கடை உள்ளிட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொள்ளாச்சியில் பல பகுதிகளில் திடீர் சோதனை செய்த வருமான வரித்துறையினர் சோதனையின் ஒரு பகுதியாக கடை ஊழியர்களிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த விசாரணையின் போது அதிகாரிகள் பல ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. 

 
மேலும் பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதே போன்று கல்குவாரி, எண்ணெய் ஆலை உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

பொள்ளாச்சியில் ஒரே நாளில் பல பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

From around the web