4 சொந்த வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த மாமியாரை கொலை செய்த மருமகள்!

மும்பையில் சொந்தமாக நான்கு வீடுகள் இருந்த 70 வயது முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பையில் உள்ள சஞ்சனா என்ற 70 வயது பெண்ணிற்கு குழந்தை இல்லாததால் கணவரின் சகோதரர் மகன் தினேஷ் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்த நிலையில் தத்துப்பிள்ளை தினேஷுக்கு அஞ்சனா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். இந்த முதிய பெண்ணுக்கு
 
4 சொந்த வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த மாமியாரை கொலை செய்த மருமகள்!

மும்பையில் சொந்தமாக நான்கு வீடுகள் இருந்த 70 வயது முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மும்பையில் உள்ள சஞ்சனா என்ற 70 வயது பெண்ணிற்கு குழந்தை இல்லாததால் கணவரின் சகோதரர் மகன் தினேஷ் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்த நிலையில் தத்துப்பிள்ளை தினேஷுக்கு அஞ்சனா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார்.

இந்த முதிய பெண்ணுக்கு மும்பையின் முக்கிய பகுதிகளில் 4 வீடுகள் சொந்தமாக உள்ளது. இதில் மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் தானும் தன்னுடன் தினேஷ் மற்றும் அஞ்சனாவை உடன் வைத்திருந்தார்

மேலும் இந்த முதிய பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளாக அருகிலுள்ள ஜெயின் கோவிலில் பிச்சை எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. தினேஷும் அவருடைய மனைவியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறினாலும் தினமும் அதிக வருவாய் கிடைப்பதால் அவர் தொடர்ந்து பிச்சை எடுத்துள்ளார். இதனால் மாமியார், மருமகள் இடையே அவ்வபோது சண்டை வந்துள்ளது. மேலும் தனது மாமியாரிடம் சொத்தை தனது பேருக்கு எழுதி தரும்படி மருமள் அஞ்சனா அவ்வபோது கூறியதாகவும் ஆனால் அதற்கு அந்த முதிய பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் முதிய பெண் திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக அஞ்சனா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் அவரது உடலில் இருந்த காயத்தை பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அஞ்சனாவை தங்கள் பானியில் விசாரித்த போது தனது மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்

மாமியார் தன்னிடம் அடிக்கடி சண்டை போட்டதாகவும் அவருக்கு சொந்தமான வீடுகளை தனது பெயருக்கு எழுதி கொடுக்க மறுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்து மாமியாரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அஞ்சனாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

From around the web