"தகாத வார்த்தை" போலீஸ் மற்றும் பணியாளர்கள் வாக்குவாதம்!

மதுரை கொரோனா மருத்துவமனையில் பணியாளர்களுடன் காவல்துறையினர் தரக் குறைவாக வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது!
 
"தகாத வார்த்தை" போலீஸ் மற்றும் பணியாளர்கள் வாக்குவாதம்!

தற்போது நாடெங்கும் ஆட்கொல்லி கொரோனா ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா நோய் பரவலை கடந்த ஆண்டு இந்தியா கட்டுப்படுத்தி இருந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து நாட்டு மக்களை வீதியில் தள்ளிவிட்டது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்து மட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகரித்து மக்களை மிகுந்த சோகத்தில் கொடுத்துள்ளது. மேலும் இதற்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். மேலும் இதற்கு எதிராக மருத்துவர்கள் பலர் போராடி வருகின்றனர்.corona

மேலும் அவர்கள் தங்களது உயிரினும் பெரிதாக எண்ணாமல் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இத்தகைய மருத்துவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உதவிகள் போலீசாரால் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் இந்த போலீசாரால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் போலீசாருக்கும் மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகின்றன. இச்சம்பவம் தற்போது தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரை மாநகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன்படி கொரோனா மருத்துவமனை பணியாளர்களுடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசியதாக கூறி கொரோனா மருத்துவமனை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் மருத்துவருக்கு செவிலியர் க்கும் இடையேயான பிரச்சனையும் நாட்டில் பல மருத்துவமனைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

From around the web