மூன்று விலை நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்?வீடியோ வெளியிட்டார்!

கொரோனா இரண்டாவது அலைக்கு மத்திய மற்றும் மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று கூறினார் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின்!
 
மூன்று விலை நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்?வீடியோ வெளியிட்டார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவித்த தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. குறிப்பாக தமிழகத்தின் மிகவும் வலிமையான பழமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக கட்சியின் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் .மேலும் அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.stalin

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது நேற்றைய தினம் தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. ஆயினும் பல மருத்துவமனைகளில் தடுப்பூசிகள்  தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் விலை  அதிகமாக காணப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தடுப்பூசிகளுக்கு மூன்று விதமான விலை நிர்ணயிப்பது அநியாயம் என்று அவர் கூறியுள்ளார் மேலும் தற்போது எழுந்துள்ள கொரோனா  இரண்டாவது அலைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கல் வலியுறுத்தியுள்ளார்.மேலும் மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்ய கூடுதல் நிதி வேண்டும் என்றும் கேட்டுள்ளார் மேலும் நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உறுதிமொழி அளித்துள்ளார்.

From around the web