ஆந்திராவில் பரபரப்பு: காதலன்மீது ஆசிட் வீசிய காதலி!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் என்ற இடத்தில் உள்ள பெத்தபள்ளியில் நாகேந்திரா என்பவர் மீது அவரது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

காதல் தோல்வி, காதலித்து ஏமாற்றிய பெண்ணின் மீது ஆசிட் வீச்சு என நாம் பலவகையான சம்பவங்கள் குறித்து நாம் அவ்வப்போது கேட்டும், கண்டும் இருப்போம்.

அதிலும் காதலித்து பெண்கள் ஏமாற்றுவதாக ஆண்கள் புலம்பித் தீர்ப்பதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் என அனைத்து வலைதளங்களிலும் வளைத்து வளைத்து ஸ்டேட்டஸ் வைப்பதும் பழகிப் போன ஒன்றே.

இன்று ஆந்திராவில் நடந்துள்ள சம்பவமானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா? ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் என்ற இடத்தில் உள்ள பெத்தபள்ளியில் நாகேந்திரா என்பவர் மீது அவரது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது சுரியா என்பவர் நாகேந்திரா என்பவரை 2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது காதல் குறித்து இருவர் வீட்டிலும் இதுகுறித்துப் பேசியநிலையில், சுரியா வீட்டில் சம்மதித்தநிலையில் நாகேந்திரன் வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல், வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த உள்ளதாக சுரியவுக்குத் தெரிய வந்தது.

இதனால் சுரியா, நாகேந்திரன் மீது ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவம் சமூக  வலைதளத்திலும் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

From around the web