முக்கிய செய்தி:தல பிறந்த நாள் அன்று மீண்டும் தடுப்பூசி திருவிழா!

மே 1ஆம் தேதி  தமிழகம் அனைத்தும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது!
 
முக்கிய செய்தி:தல பிறந்த நாள் அன்று மீண்டும் தடுப்பூசி திருவிழா!

மக்கள் மத்தியில் மிகவும் ஆட்கொல்லி நோய் என்ற பெயரை பெற்றுள்ளது கொரோனா வைரஸ்.இந்த கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவிலும் இந்த வைரஸுக்கு எதிராக போராட்டம் தினமும் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிகழ்கிறது. மேலும் இத்தகைய கட்டுப்பாடுகளும் இதற்கெதிராக போராட்டமும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது.

tamilnadu

மேலும் தமிழகத்தின் சார்பிலும் சில தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனை தொடர்ந்து தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. இத்தகைய போராட்டங்களை தடைகளும் கட்டுப்பாடுகளும் போட்டாலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாக காணப்படுவது மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கஷ்டத்தையும் கொடுத்துள்ளது. மேலும் இவை மக்களின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. தமிழகத்தின் சார்பில் தற்போது இலவச கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இவை மே 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இலவச கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறுகிறது.

From around the web