முக்கிய செய்தி: அனுமதி பெறாமல் வைத்து சிலைகளை அகற்ற உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்க சிலைகளை அகற்ற உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு!
 
முக்கிய செய்தி: அனுமதி பெறாமல் வைத்து சிலைகளை அகற்ற உத்தரவு!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு உயர்நீதிமன்றம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படிதமிழகத்தில் உயர்நீதிமன்றம் ஆனது தலைநகரமான சென்னையில் உள்ளது. ஆனால் இந்த உயர்நீதிமன்றத்திற்கு தென் தமிழக மக்கள் நேரில் வந்து வழக்கு தொடுத்து விசாரணையில் ஈடுபடுவது மிகுந்த சிரமம் என்பதால் அவர்கள் உதவும்  வண்ணமாக உயர்நீதிமன்ற கிளை ஆனது மதுரையில் உள்ளது. இந்நிலையில் தென் தமிழக மக்களின் வழக்குகள் இந்த உயர் நீதிமன்ற கிளையில் விசாரிக்க படுகின்றன.

statue

இந்நிலையில் இவ்விரு நீதிமன்றங்களிலும் தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆனது தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைத்த சிலைகளை அகற்ற அதிரடியாக உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும் அனுமதி பெறாமல் உள்ள சிலைகளை அகற்ற வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு  உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கினை தஞ்சையை சேர்ந்த வைர சேகர் என்பவர் தொடுத்திருந்தார். மேலும் அவர் தொடுத்த பொதுநல வழக்கின் படி தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மனுதாரர் தரப்பில் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள சிலைகள் சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளை சிலைகளை அகற்றக் கோரி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

From around the web