முக்கிய செய்தி! ஏப்ரல் 20 வரை புதிய கட்டுப்பாடு கிடையாது!"கர்நாடகத்தில்"

கர்நாடகத்தில் வருகின்ற ஏப்ரல் 20 தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் கிடையாது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்!
 
முக்கிய செய்தி! ஏப்ரல் 20 வரை புதிய கட்டுப்பாடு கிடையாது!"கர்நாடகத்தில்"

எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலையானது தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கூறப்பட்டுள்ளன. இப்படி கூறப்படும் ஆட்கொல்லி நோயான இந்த கொரோனா மனிதனின் உடலுக்குள் சென்று பல்வேறு இன்னல்களை தந்து அதன் பின்னர் அவர்களை மரணத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. உலகில் அனைத்து மக்களும் கொரோனா நோய்க்காக மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும் பல நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவிலும் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன.

lockdown

சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சார்பில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகள் விதித்து ,அதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி கர்நாடக முதல்வர் எடியூரப்பா கர்நாடகத்தில் வருகின்ற 20ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பெங்களூருவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இத்தகவலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் கர்நாடகாவில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு பல நகரங்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா கட்டுப்படுத்த சில நகரங்களில் ஊரடங்கு அமல் படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கர்நாடகாவில் புதிதாக கட்டுப்பாட்டு விதிகள் எதுவும் இருக்காது என்று முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

From around the web