சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை: பரபரப்பு தகவல்

சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கருத்து அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று திடீரென சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர்
 

சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கருத்து அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று திடீரென சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்து வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை: பரபரப்பு தகவல்

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இந்த ஆலோசனை குறித்த தகவல் இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்றும் கூறப்படுவதால் அதிமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web