அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு குறித்த அதிரடி அறிவிப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை குறைப்பது குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே குறிப்பாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடங்களை குறைக்க வேண்டும் என பரிசீலனை செய்யப்பட்டு வந்ததாக
 

அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு குறித்த அதிரடி அறிவிப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே

இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை குறைப்பது குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே

குறிப்பாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடங்களை குறைக்க வேண்டும் என பரிசீலனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பில் 50 சதவீத பாடங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பத்தாம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல், ஒரே புத்தகமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் மாணவர்களுக்கு கணிதம் இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே புத்தகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவே வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 50% பாடங்கள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல்கள் உறுதி செய்தால் மட்டுமே பாடங்கள் மேலும் குறைக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web