முக்கிய அறிவிப்பு! டெல்லியில் விடுமுறையில் ஊரடங்கு உறுதி!

டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
 
முக்கிய அறிவிப்பு! டெல்லியில் விடுமுறையில் ஊரடங்கு உறுதி!

மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி ஆட்கொல்லி நோயாக தற்போது கொரோனா காணப்படுகிறது. கொரோனா நோய் நட்பு நாடான சீனாவில்  கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம், இந்தியாவிலும் 2020 ஆண்டின் இறுதியில் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்நிலையில் இந்தியாவில் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகம் மகாராஷ்டிரம் டெல்லி போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தற்போது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

aravind kejiriwal

அதன்படி டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்று ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் உடற்பயிற்சி மையங்கள் ஆடிட்டோரியம் போன்றவற்றை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதிரடி உத்தரவினை கூறியுள்ளார்.

சனி மற்றும் ஞாயிறு அத்தியாயமான பணிகளுக்காக மட்டும் அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.திரையரங்குகளில் 30% பேர் மட்டுமே அனுமதி , ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஹோட்டல்களில் பார்சல் வாங்கி செல்ல மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதிக்கிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் காலவரையற்ற பள்ளிகள் மூடப்பட்டு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க அனுமதி மறுத்துள்ளது டெல்லி மாநில அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web