முக்கிய மற்றும் அதிர்ச்சி தகவல்: இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை?

வாக்கு எண்ணும் அறை சிறியதாக இருந்தால் இரண்டு அறைகளில் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!
 
முக்கிய மற்றும் அதிர்ச்சி தகவல்: இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை?

தமிழகத்தில் முன்னர் அறிவித்தபடி சட்டமன்றத் தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்றத்தேர்தல் அதிக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ உள்ளார். தேர்தலுக்காக பல்வேறு முன்னேற்பாடுகளையும் விதிமுறைகளையும் நாள்தோறும் செய்தியாளர்கள் மத்தியில் கூறிவந்தார். மேலும் அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட அதிகமான பெண்கள் வாக்களித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.vote

மேலும் அவர் இது சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சில தகவல்களையும் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் இரண்டு அறைகளில் எனப்படும் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மேலும் ஒரு அறைக்கு ஏழு மேசைகள் என்று 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வாக்கு எண்ணும் அறை சிறிதாக இருந்தால் இரண்டு அறைகளில்எண்ணிக்கை  நடவடிக்கை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் முகவர்களுக்கான பரிசோதனை மேற்கொள்வது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இதனால் இந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எனவே இரண்டு அறைகளில் எண்ண பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web