ஜேஇஇ தேர்வில் ஆள்மாறாட்டம்: தானே உளறி மாற்றிக் கொண்ட வாலிபர் 

 

ஜேஇஇ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் ஒருவர் தானே மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சமீபத்தில் நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வில் 99.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து ஐஐடியில் பெறும் தகுதியை பெற்று இருந்தார். ஆனால் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு போஸ்டில் தான் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை குறிப்பிட்டு அதனால்தான் இவ்வளவு மார்க் வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார் 

இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை செய்தபோது தனது பெயர் மற்றும் ரிஜிஸ்டர் எண்ணை மட்டுமே அவர் நிரம்பியதாகவும் அதன் பின்னர் கேள்விக்கான பதில்கள் அனைத்தும் வெளியில் உள்ள ஒரு நபர் மூலமாக எழுதப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது 

இந்த மோசடிக்கு அந்த தேர்வு மையத்தின் ஊழியரும் உடந்தை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து தேர்வாளர், தேர்வு எழுதியவர், உடந்தையாக இருந்த அதிகாரி என மூவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. ஆள்மாறாட்டம் செய்ததை சமூக வலைத்தளத்தில் உளறிய வாலிபரால் அவரோடு சேர்ந்து மூன்று பேர் மாட்டிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web