நீட் தேர்வின் தாக்கம்-நீதியரசர் தலைமையில் 8 உறுப்பினர்கள்  நியமனம்;

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையிலான குழுவில் 8 உறுப்பினர்கள் நியமனம்
 
neet

தற்போது சில வருடங்களாக நம் தமிழகத்தில் அனைவராலும் புறக்கணிக்கப் படுகின்ற ஒரு தேர்வு என்றால் அதனை நீட் தேர்வு என்றே கூறலாம். அந்த நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை காணப்படுகிறது. இவை பல மாநிலங்களில் ஆதரித்தாலும் நம் தமிழகத்தில் இவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளும் நீட் தேர்வு புறக்கணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது tamilnadu

அது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது நீட் தேர்வின் தாக்கம் பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நீட் தேர்வில் தாக்கம் ஆராய குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜன் தலைமையில் புதிதாக எட்டு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் அவர்களில் டாக்டர்களாக உள்ள ரவீந்திரநாத்.,ஜவகர் நேசன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும் மருத்துவம் பள்ளிக்கல்வி சட்டத் துறைச் செயலாளர்கள் 9 பேரும் குழுவில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவர்களின் நலனை பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை ஒரு மாதத்தில் குழு அளிக்கும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 9 பேர் இந்த கொண்ட இந்த குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தரும் என்றும் கூறியுள்ளது. மேலும் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது என்றும் கூறியுள்ளது.

From around the web