தலை நிமிர்ந்து வருகிறேன்! "போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!";மகனாக உருக்கம்!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
 
stalin

தற்போதைய இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள திமுக கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வரும் முன்னாள் முதல்வரின் மகனுமான முக ஸ்டாலின் அவரது நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறுகிறது. அதன்படி கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.stalin

மேலும் சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஆருயிர் தலைவரே ஜூன் 3ஆம் தேதியன்று கம்பீரமாக வருகிறேன் என்று தமிழக முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன் என்று மு க ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றி விட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். நீங்கள் மறையவில்லை மறைந்திருப்பது என்னைக் கவனிப்பதாக தான் நான் எப்போதும் நினைப்பேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். கோட்டை  பற்றி அடுத்த நாளே கொரோனா போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். உழைப்பு! உழைப்பு! என்று என்னை உருக படுத்தினீர்கள் உண்மையாகவே இருக்க உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

 தேர்தலில் வாக்களிக்க தவறியவர்கள் பலரது பாராட்டையும் கழகத்துக்கு வாங்கித்தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் ஜூன் மூன்றாம் தேதி அன்று உங்களை வெற்றி செய்தியோடு சந்திக்க வருகிறேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் டுவிட்டரில் உருக்கமாக கூறியுள்ளார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

From around the web