கடத்தப்பட்ட இளமதி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்: திடீர் திருப்பம்

சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் இளமதி திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார் தனது வக்கீலுடன் ஆஜராகி தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இளமதி மற்றும் செல்வன் ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜாதி மறுப்புத் திருமணம் ஆன இந்த திருமணத்திற்கு இளமதியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனையடுத்து செல்வன் தனது ஆதரவாளர்களுடன்
 
கடத்தப்பட்ட இளமதி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்: திடீர் திருப்பம்

சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் இளமதி திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்

தனது வக்கீலுடன் ஆஜராகி தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இளமதி மற்றும் செல்வன் ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜாதி மறுப்புத் திருமணம் ஆன இந்த திருமணத்திற்கு இளமதியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனையடுத்து செல்வன் தனது ஆதரவாளர்களுடன் இளமதியை திருமணம் செய்தார். திருமணம் செய்த சில நிமிடங்களில் இருவரும் வெவ்வேறு நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்த நிலையில் இன்று மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web