உதயசூரியனுக்கு வாக்கு அளித்தால் இரட்டை இலையில் வாக்கு பதிவா?

ஆவடி மற்றும் அவிநாசியில் உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குப்பதிவு!
 

தமிழகத்தில் இன்றைய தினம் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இந்த வாக்கு பதிவானது காலை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கிறது. மேலும் பல பகுதிகளிலும் முகக்கவசம், கையுறை அணிந்து வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு வெப்பநிலையானது கவனிக்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க செல்கின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகள் பலரும் தங்களது வேலைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

voting machine

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பல கூட்டணிகள் களமிறங்கியுள்ளனர் .பல பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த படி இன்று காலை தளபதிவிஜய் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்து வந்தார். மேலும் தல அஜித்தும்  தனது வாக்கினை பதிவு செய்துகொண்டார். இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒரு சில தொகுதிகளில் கோளாறு என புகார் எழுந்துள்ளது.

அதன்படி ஆவடி தொகுதியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் உள்ள 123 வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் கோளாறு என்று புகார் எழுந்துள்ளது.ஆவடி தொகுதியில் திமுக வாக்களித்தால் விவிபேட் எந்திரத்தில் இரட்டை இலை சின்னம் பதிவாக புகார் எழுந்துள்ளது. மேலும் இது தொடர்ந்து அவிநாசியில் உதயசூரியன் பட்டனை அழுத்தினால் இரட்டை இலை சின்னத்தில் பதிவாகியதாக புகார். அவினாசி தொகுதிக்குட்பட்ட கணியம்பூண்டி 112வது வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் கோளாறு இருக்கிறது. இந்த புகாரை தொடர்ந்து கணியம்பூண்டி வாக்குச்சாவடியில் வாக்கு பதிவானது நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல். மேலும் அப்பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக வாக்கு பதிவானது நிறுத்தி வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web