மீன் பிடிக்க வலை விரித்தால் மலைப்பாம்பு கிடைத்தது!! "அதிர்ச்சியில் மக்கள்"

தொண்டைமான் குலத்தில் நீர் நிரம்பி உள்ளதால் மீன் பிடிக்க விரிக்கப்பட்ட வலையில் மலைப்பாம்பு சிக்கியது!
 
kulam

தற்போது பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் குளங்களும் ஏரிகளும் நிரம்பி காணப் படுகின்றன. எனினும் ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த மாவட்டத்தில் காணப்படுகின்ற அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் விதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள பல குளங்கள் ஏரிகளில் மழை பெய்ததால் அங்குள்ள நீர் நிலைகளில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்படுகிறது.snake

இதனால் மக்கள் மீன்பிடிக்க செல்கின்றனர் ஆனால் அவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ராஜபாளையம் அருகே முகவூர் கண்மாய் கரையில் மீன் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. மேலும் தொண்டைமான் குளத்தில் நீர் நிரம்பி உள்ளதால் மீன் பிடிக்க விரிக்கப்பட்ட வலையில் மலைப்பாம்பு சிக்கியது. மேலும் இந்த மலை பாம்பானது 8 அடி நீளம் உள்ளதால் பொதுமக்கள் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த மலை பாம்பானது இதற்கு முன்பாக பெரிய பூனையை விழுங்கிய நிலையில் வனத்துறையினர் சேத்தூர் மலைப்பகுதியில் அதனை விட்டு விட்டனர்.இதனால் அச்சத்தில் உள்ள மக்கள் தற்போது அந்த மலைப்பாம்பை கண்டதும் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

From around the web