குறையும் குறையும் என்று பார்த்தால் கூட தான் செய்கிறது கொரோனா பலி!!!

புதுச்சேரியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
death

மக்கள் மனதில் அதிகம் பேசப்படும் வார்த்தையாக கொரோனா தற்போது உருவெடுத்துள்ளது.  இந்த கொரோனா நோயானது மக்களுக்கு அதிக இன்னலை தருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வட மாநிலங்களான மகாராஷ்டிரா புது டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த பாதிப்பானது தற்போது அதிகமாக குறைந்து வருவது ஓரளவு மகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அந்த ஐந்து மாநிலங்களான மேற்குவங்கம் அசாம் புதுச்சேரி தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் இந்த கொரோனா நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.pudhucherry

மேலும் இந்த மாநிலங்களில் அனைத்திலும் தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நமது அண்டை மாநிலம் யூனியன் பிரதேசமாக இருக்கிற புதுச்சேரியில் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1223 பேருக்கு இந்த கொரோனா நோய் அறிகுறி தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இதனால் அங்குள்ள மக்களிடம் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் குணமடையும் ஓர் அளவு அதிகமாக இருப்பது அங்குள்ள மக்களுக்கு ஓரளவு ஆறுதலை தருகிறது.

From around the web