நீங்கள் 3 அடியை தூக்கினால், நான் 30 அடியை தூக்குவேன்: சீமான் ஆவேசம்!

 
நீங்கள் 3 அடியை தூக்கினால், நான் 30 அடியை தூக்குவேன்: சீமான் ஆவேசம்!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகம் இருந்தது ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக திருமாவளவன் விஷயத்திலும் மனுநீதிச் அமர்ந்து விஷயத்திலும் பாஜகவின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பாஜகவின் இந்த நிலை குறித்து ஆவேசமாக சீமான் கூறியதாவது: திருமாவளவன் மனுஸ்மிருதியில் பெண்களை இழிவாக பேசப்பட்டிருக்கிறது என்பதுதான் சொன்னாரே தவிர அவர் பெண்களை இழிவாகப் பேசவில்லை. உண்மையில் திருமாவளவன் பெண்கள் மீதான அக்கறையால் தான் பேசியுள்ளார்.

பாஜக நடத்தவிருக்கும் வேல் யாத்திரையை குறித்த சீமான் கூறியபோது, ‘பாஜகவுக்கும் வேலுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இத்தனை ஆண்டுகாலமாக அதை செய்யவில்லை?" "முருகன் ஒரு தமிழ்க் கடவுள். அவரை ஓட்டுக்காக பாஜக சேர்த்துக் கொள்கிறது. நீங்கள் 3 அடியில் வேலை தூக்கினால் நான் 30 அடியில் தூக்குவேன்’ என்று சீமான் தெரிவித்தார்

மேலும் தற்போது பாஜகவில் சேரும் நடிகர், நடிகைகள் தேர்தல் முடிந்தபின்னர் காணாமல் போய்விடுவார்கள் என்றும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்

From around the web