இரண்டுக்கு மேல் குழந்தை இருந்தால்  அரசு வேலை கிடையாது!!

இரண்டுக்கு மேல் குழந்தை இருந்தால் அரசு வேலை,மற்றும் நல உதவிகள் கிடையாது
 
no job

தற்போது நம் இந்தியாவில் பல இளைஞர்கள் மட்டுமின்றி பொது மக்கள் பலரும் வேலை இன்றி தவிக்கின்றனர். காரணம் என்னவெனில் மக்கள் தொகை அதிகரிப்பு மட்டுமின்றி தொழில் நிறுவனங்களின் பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலரும் வேலை இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் மாநில அரசானது படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறுகின்றனர். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 மாநில அரசுகளின் பல தேர்தல் அறிக்கையிலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தன.assam

இந்நிலையில் தற்போது சில அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்று கூறப்படுகிறது அசாம் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை மற்றும் நல உதவிகள் கிடையாது என்று பேரவையில் மசோதா கொண்டு வர வேண்டும் என்று அசாம் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் அசாம்  அரசின் மசோதா வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் தகவல்.

 மேலும் இந்த கொள்கை முடிவு ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் வங்கதேசத்திலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை செய்யும் நோக்கத்தில் இத்தகைய முடிவினை அசாம் மாநில முதல்வர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் அசாம் பழங்குடியினருக்கு இந்தக் கொள்கைப் பொருந்தாது என்றும் அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது.

From around the web