நீங்கள் தென்சென்னை மக்களாக இருந்தால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!!

தமிழகத்தின் தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது!
 
chennai

தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் திமுக ஆட்சி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தேர்தலுக்காக கூறியிருந்த அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தினை தக்க வைத்து வருகிறார்.hospital

மேலும் அவர் கூறாத வேறு சில நலத்திட்டங்களையும் மக்களின் கால சூழ்நிலைக்கு ஏற்ப செய்து வந்து மக்களின் மனதில் நல்லதொரு முதல்வராக வலம் வருகிறார். இன்றையதினம் அவரின் தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக திமுகவின் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் போன்றோர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.  தற்போது தமிழக அரசு சில மக்களுக்கு தேவையான நல்ல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தின் தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவை 250 கோடி செலவில் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் சென்னை கிங் இன்ஸ்டிடியூட்  வளாகத்தில் 250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

From around the web