உடனடியாக மாற்ற வில்லை என்றால் மே இரண்டாம் தேதி ஆணை வெளியாகும் திமுக தலைவர்!

பெரியார் நெடுஞ்சாலை பெயர் மாற்றம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனத்துடன் கூடிய ட்விட்டர் பக்கம்!
 
உடனடியாக மாற்ற வில்லை என்றால் மே இரண்டாம் தேதி ஆணை வெளியாகும் திமுக தலைவர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் வாக்காளர் பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி வைத்து களமிறங்கி இருந்தபடி தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக வானது தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

stalin

அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் அத்தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் சில தினங்களாக தமிழகத்தில் நிறைய பெற்றது .

தமிழகத்தில் தற்போது புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது. அதன்படி தமிழகத்தில் ஈவேரா பெரியாரின் நெடுஞ்சாலை பெயர் தற்போது மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது அதன்படி தமிழகத்தில் ஈவேரா நெடுஞ்சாலை தற்போது கிராண்ட் வெஸ்ட் கிராஸ் ரோடு என்று மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு பல கட்சித் தலைவர்களும் பல பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன்படி தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின்தனது ட்விட்டர் பக்கத்தில் ஈவேரா நெடுஞ்சாலையை கிராண்ட் டிரங்க் ரோடு என மாற்ற அரசுக்கு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் எஜமானர்கள் கால் பிடிக்கும் வேலையா?பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் உடனடியாக மாற்றிடுக!, எடுக்க தாமதித்தால் மே 2 பிறகு ஆணை வெளியாகும் என மு க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

From around the web