அதிமுக வெற்றி பெற்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அல்ல மோடி தான் முதல்வர்!

பாபநாசத்தில் பரப்புரை மேற்கொள்ளும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்!
 

சட்டமன்றத் தேர்தல் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியாக பாஜக, பாமக போன்ற கட்சிகள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான கட்சியாக இருக்கும் திமுக கட்சி தன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்உள்ளது.

thirumavalavan

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதற்காக திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 6 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .தற்போது அவர் பாபநாசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்பொழுது அவர் கூறினார் அதிமுக வெற்றி பெற்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்ல முதல்வராக மோடி இருப்பார் என்பது பொருள் எனவும் ,துணை முதல்வராக பன்னீர்செல்வம் இருக்கமாட்டார் அமித்ஷா தான் துணை முதல்வர் எனவும் பரப்புரையில் அவர் கூறினார். மேலும் பாஜக ,அதிமுக பற்றி மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் பேசுவதே கிடையாது எனவும் பரப்புரையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

From around the web