நடிகரின் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான மதிப்புடைய சிலைகள்

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக பிரபல தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி கோடிக்கணக்கான மதிப்புள்ள தொன்மையான சிலைகளை மீட்டுள்ளார். ரன்வீர்ஷா ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜவுளித்தொழில் உள்பட பல தொழில்கள் புரிந்து வரும் நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் யாவும் இவர் திருடவில்லை என்பதும், விலை கொடுத்து சிலை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கியுள்ளார் என்பதும் முதல்கட்ட விசாராணையில் தெரியவந்துள்ளது. ரன்வீர் ஷா
 

நடிகரின் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான மதிப்புடைய சிலைகள்

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக பிரபல தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி கோடிக்கணக்கான மதிப்புள்ள தொன்மையான சிலைகளை மீட்டுள்ளார்.

ரன்வீர்ஷா ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜவுளித்தொழில் உள்பட பல தொழில்கள் புரிந்து வரும் நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் யாவும் இவர் திருடவில்லை என்பதும், விலை கொடுத்து சிலை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கியுள்ளார் என்பதும் முதல்கட்ட விசாராணையில் தெரியவந்துள்ளது.

ரன்வீர் ஷா வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும். அம்மன் சிலைகளும் நந்தி சிலைகளும் பழைமையான கல்தூண்களும் எந்தக் கோயில்களிலிருந்து திருடப்பட்டவை என்பதை சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web