கனிமொழி குற்றச்சாட்டால் 700 எம்பிக்களுக்கு சிக்கலா? பரபரப்பு தகவல்

சமீபத்தில் தனக்கு ஹிந்தி தெரியாததால் இந்தியரா? என விமான நிலைய ஊழியர் ஒருவர் தன்னிடம் கேட்டு அவமதிப்பு செய்துவிட்டதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் கனிமொழியிடம் இந்தி தெரியாதா என கேட்ட அதிகாரி யார் என்பதை அடையாளம் காட்டுங்கள் என்றும் இதுதொடர்பாக புகார் அளியுங்கள் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை கனிமொழி எந்த புகாரும் அளிக்கவில்லை என்பதும் அந்த அதிகாரியை அடையாளம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்
 

கனிமொழி குற்றச்சாட்டால் 700 எம்பிக்களுக்கு சிக்கலா? பரபரப்பு தகவல்

சமீபத்தில் தனக்கு ஹிந்தி தெரியாததால் இந்தியரா? என விமான நிலைய ஊழியர் ஒருவர் தன்னிடம் கேட்டு அவமதிப்பு செய்துவிட்டதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் கனிமொழியிடம் இந்தி தெரியாதா என கேட்ட அதிகாரி யார் என்பதை அடையாளம் காட்டுங்கள் என்றும் இதுதொடர்பாக புகார் அளியுங்கள் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை கனிமொழி எந்த புகாரும் அளிக்கவில்லை என்பதும் அந்த அதிகாரியை அடையாளம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கனிமொழி எம்பி என்று தெரியாததால் தான் இந்த சிக்கல் வந்ததாகவும் இதனை அடுத்து இனிமேல் அனைத்து எம்பிக்களும் விமான நிலையத்திற்கு செல்லும் போது தங்கள் அடையாள அட்டையை அணிந்து செல்ல வேண்டும் என்றும் அந்த அடையாள அட்டையை பார்த்து பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகள் அவர்கள் எம்பி என்று அடையாளம் தெரிந்து எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது

இதனை அடுத்து இனிமேல் ராஜசபா, லோக்சபாவில் உள்ள 700 எம்பிக்களும் விமான நிலையம் செல்லும் போது அடையாள அட்டை அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் போது எம்பிக்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை அணிந்து வரவேண்டும் என லோக்சபா சபாநாயகர் அறிவுறுத்த முடிவெடுத்துள்ளாராம். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதால் எம்பிக்களை செக்யூரிட்டி கேமரா ஸ்கேன் செய்வதில் சிக்கல்கள் உள்ளதால் இந்த அடையாள அட்டை நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கனிமொழியின் ஒரே ஒரு குற்றச்சாட்டால் 700 எம்பிக்களும் இனிமேல் அடையாள அட்டை அணிந்து வரவேண்டும் என்ற நடைமுறை வரவுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web