"நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம்" வேகவரம்பிற்கு ஐகோர்ட் மறுப்பு!!

நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது
 
speedometer

தற்போது நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இதனால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே வருகின்றன. மேலும் வாகனங்களின் உற்பத்தியும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் சாகச முயற்சியில் ஈடுபடுவது அப்போது காண்கிறோம். மேலும் மத்திய அரசும் சில தினங்களுக்கு முன்பாக வேக வரம்பினை அறிவித்துள்ளது.speedometer

அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தற்போது மத்திய அரசின் வேக வரம்பிற்கு ரத்து செய்யப்பட்டதாக தகவல்.  அதன்படி நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சாலை மேம்பாடு,  இன்ஜின் செயல்பாட்டை அதிகரிக்க வேக வரம்பு அதிகரிக்கப்பட்டதாக  அரசு தெரிவித்த இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது ஹை கோர்ட். இதனால் மத்திய அரசு வேக வரம்பிற்கு ஐகோர்ட் ரத்து செய்துள்ளது தெரியவந்துள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதனால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் காணப்படுகிறது.

From around the web