போராட்டத்தை நிறுத்தலன்னா ராணுவத்தைப் பயன்படுத்துவேன்.. ட்ரம்ப் பேச்சு!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். இந்தநிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை எனில் நான் ராணுவத்தைக்கூட பயன்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ட்ரம்ப்
 
போராட்டத்தை நிறுத்தலன்னா ராணுவத்தைப் பயன்படுத்துவேன்.. ட்ரம்ப் பேச்சு!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர்.

இந்தநிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை எனில் நான் ராணுவத்தைக்கூட பயன்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது ட்ரம்ப் கூறுகையில், ”ஜார்க் ப்ளாயிட் இறப்பிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும். ஆனால் மக்கள் தங்களது போராட்டத்தினைக் கைவிடுதல் அவசியம். இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் நிச்சயம் மக்களின் நலனுக்கு ஆதரவாக செயல்படுவேன். மேலும் நமது நாட்டின் சட்டத்தினை பாதுகாப்பதும் என் கடமை என்பதை நான் அறிவேன்.

போராட்டத்தை நிறுத்தலன்னா ராணுவத்தைப் பயன்படுத்துவேன்.. ட்ரம்ப் பேச்சு!!

போராட்டக்காரர்களால் மற்ற மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது, உண்மையில் இது கண்டிக்கத்தக்க விஷயம். போராட்டக்காரர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை எனில், நான் எந்த எல்லைக்கும் போவேன் என்பதை தெரிவிக்கிறேன்.  நான் ராணுவத்தை கூட பயன்படுத்தி இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் மற்றொருபுறம் கருப்பின மக்களுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

From around the web