அசைய மாட்டேன், 5000 மணி நேரம் கூட காத்திருப்பேன்: ராகுல் ட்விட்டால் பரபரப்பு 

 

சமீபத்தில் வேளாண் மசோதக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆகியோர் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அரியானாவுக்கு டிராக்டர் பேரணி சென்றனர். இந்த டிராக்டர் பேரணி அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

ஹரியானா மாநிலத்திற்குள் பேரணியை அனுமதிக்கும் வரை காத்திருக்க போவதாகவும் போராட்டம் நடத்தப்போவதாகவும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மணி நேரம் என்ன, 5 மணி நேரம் என்ன, 5000 மணி நேரம் வரை காத்திருக்க தயார் என்றும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி ஹரியானா மாநிலத்திற்குள் ராகுல்காந்தி அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அதே நேரத்தில் 100 பேருடன் பேரணி நடத்த ராகுல் காந்திக்கு ஹரியானா மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் உபி மாநிலம் ஹாத்ராஸ் என்ற பகுதிக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார் என்பதும், அதன்பின் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web