அனைத்து துறைகளையும் நேரடியாக கண்காணிப்பேன்! வீடியோவில் முக ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கும் நிலையில் வீடியோ வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்!
 
அனைத்து துறைகளையும் நேரடியாக கண்காணிப்பேன்! வீடியோவில் முக ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில தினங்கள் உள்ளது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் சில தினங்களாக செய்தியாளரை சந்தித்து சில தகவல்களை கூறியிருந்தார்.  தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பறக்கும் படையினர் வாகனசோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

stalin

தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக வானது கூட்டணியாக காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்துள்ளது. முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி வேட்பாளர்கள் பலரையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனைத்து துறைகளையும் நேரடியாக கண்காணிப்பின் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு தண்டிக்கப்படும் எனவும் அவர் வீடியோவில் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் வீடியோவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web